Certificate in Basic Biblical Hebrew
Course Description
எபிரேய மொழி பாடத்திட்டம்
எங்களுடைய இணையதளத்தில் எபிரேய மொழியை கற்றுக்கொள்ள வரும் மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக எங்கள் பாடத்திட்டங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது எபிரேய மொழியில் 12 வகுப்புகள், நீங்கள் தினமும் உச்சரிப்பு முறை எழுத்துப் பயிற்சி மற்றும் வாசிக்கும் முறை கற்றுக்கொள்ளலாம்.
என்னென்ன பாடங்கள்? முதலாவது பாடம் ஏழு படிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் படி :
எபிரேய எழுத்துக்களின் வரலாறும் அதன் எழுத்துருவாக்கமும் கற்றுக் கொடுக்கப்படும்.
இரண்டாம் படி :
எபிரேய எழுத்துக்களின் சித்திர ஓவியம் என்று சொல்லப்படும் பிக்சர் வேர்ட் அதனுடைய குறியீடுகள் முறையே கற்றுத்தரப்படும்.
மூன்றாம் படி :
இந்த பகுதி மெய்யெழுத்க்களை எவ்விதம் உச்சரிக்க வேண்டும் அதனுடன் உயிரெழுத்துக்கள் வரும்போது எவ்விதம் உச்சரிக்க வேண்டும், மற்றும் இலக்கண விதிகளின்படி அதன் நிலைகள் சொல்லிக்கொடுக்கப்படும்.
நான்காம் படி :
உயிர் எழுத்துக்களுக்கு எவ்விதம் ஓசை எழுப்ப வேண்டும் எத்தகைய ஓசையுடைய தமிழ் எழுத்துக்கள் ஆங்கில அகர வரிசை எழுத்துக்களுடன் எப்படி ஓசை எழுப்புவது ? இவை மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் அழகாகவும் சொல்லிக்கொடுக்கப்படும் .
ஐந்தாவது படி :
பிராக்டிஸ் அதாவது பயிற்சி , ஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் கற்றுக்கொள்ளும் மெய்யெழுத்துக்கள் அந்த வகுப்பிலே கற்றுக்கொள்ளும் உயிர் எழுத்துக்களுடன் சேர்த்து உச்சரிக்க பயிற்சி கொடுக்கப்படும் . முதல் வகுப்பிலிருந்தே இந்த பயிற்சியில் நீங்களே வாசிப்பீர்கள்.
ஆறாவது படி :
இதில் சொற்கள் அமைப்பு அதாவது நீங்கள் கற்றுக்கொண்ட அந்த பாடத்தில் இருக்கிற மெய்யெழுத்து மற்றும் உயிர் எழுத்துக்களை இணைத்து சொற்களை அமைப்பது எப்படி என இந்தப்பகுதியில் கற்றுக்கொள்வீர்கள். இங்கு தான் நீங்கள் முதல்முறையாக எபிரேய வார்த்தைகளை வாசிப்பீர்கள்.
ஏழாவது படி :
வாக்கியங்களை அமைத்தல், நீங்கள் கற்றுக்கொண்ட மெய்யெழுத்து மற்றும் உயிர் எழுத்துக்களை கொண்டு சொற்களை இணைத்து அவற்றை வாக்கியங்களாக அமைத்து அதனை தெளிவாக பொருள்புரிந்து படிக்க சொல்லிக்கொடுக்கப்படும் .
இறுதியாக தேவையான சில இலக்கண விதிகளும் சேர்த்து சொல்லித்தரப்படும். விறும்பினால்ஆசிரியரிடம் நேரடியாக எபிரெய இலக்கண வகுப்புகளில் இணைந்து படிக்கலாம்.
விஷேட குறிப்பு : முறையாய் கற்றால் , முதல் வகுப்பில் வாசிக்க தொடங்கிய நீங்கள் 8 வது பாடத்தில் எபிரெய வேதத்தின் தெய்வீக வசனத்தை படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள் வாழ்த்துக்கள்.
Curriculums
Section 1 - Basic Biblical Hebrew
-
11 Lessons
-
Exam