The Blog

முதல் மனிதனின் மொழி? (பகுதி -2)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இரண்டாவது பகுதியாக எபிரேய மொழியில் அறிமுகம் என்ற தொடர்ச்சியை இந்த பகுதியில் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து எங்களுடைய ஆய்வு கட்டுரைகளையும், எங்களுடைய ஆய்வு அறிக்கைகளாக இருக்கும் ஒலி-ஒளி பேழைகளாக யூ டியூபில் போய் ஏராளமான வேத ரகசியங்களை கற்றுக்கொள்ளுங்கள். முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என்னவெனில், எபிரேய மொழியானது தேவனோடு சம்பந்தம் உடையது என்றும், தேவனோடு சம்பந்தமுடைய இந்த எபிரேய மொழி பரலோகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், பரலோகத்தில் வழக்கத்தில் இருக்கிறது என்பதையும் உள்ளப்படியே பகிர்ந்து கொண்டேன்.


இப்பொழுது இந்தப்பகுதியிலே, பல அடையாளங்கள் பல வார்த்தைகளை இந்த எபிரேய மொழியானது தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்ற போதிலும், இப்பொழுது நீங்கள் மனித சிருஷ்டிப்பை எடுத்துக் கொள்ள லாம், மனிதனுடைய முதல் சிருஷ்டிப்பில் கடவுள் முதல் மனிதனாகிய ஆதாமோடு பேசினதாகவும். உறவு கொண்டதாகவும் வேதாகமத்தில் வசன ஆதாரங்கள் உள்ளன, பரிசுத்த வேதாகமம் அதை மிக ஆணித்தரமாக நமக்கு எடுத்துரைகக்கிறது. இந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி?

எபிரேய மொழியானது ஆதியிலே தேவன் மனிதனோடு உறவு கொள்வதற்கு பயன்படுத்தியதாக, நான்: முதல் பகுதியில் எழுதியதை இப்பொழுது அதன் அடிப்படை ஆதாரங்களை, இந்த இரண்டாவது பகுதியில் எழுதுகிறேன், ஆதமோடு தேவனாகிய கர்த்தர் பேசினார் என்று வேதம் சொல்கிறது. ஆதாம் பேசினார் என்றால் தமிழில் பேசினாரா? அல்லது (ஒலி, சத்தம்) சத்தத்தால் பேசினார் என்று பார்த்தால், கண்டிப்பாக சமிக்ஞையால் பேசியிருக்க முடியாது, ஏனென்றால்! ஆதாம் ஒரு பூரண வயதுடைய ஒரு (மனிதன்)ஆண்மகனாக சிருஷ்டிக்கப்பட்டான், ஆகையால் ஆதாமுக்கு பேசக்கூடிய அனைத்து திறனும் இருந்ததாகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி முழு மனிதனாய் இருந்த அதாவது உடல் ரீதியாக முழு மனிதன் என்று நான் குறிப்பிடுகிறேன்.


தேவனாகிய கர்த்தர் பேசும்போது ஆதாம் அதை கவனித்திருகிறார். ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ஒருவர் பேசும் பொழுது அதை உள்வாங்கி திருப்பிச் சொல்லும் திறன் மனித அறிவுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதனுடைய பேச்சாற்றல் என்ற ஒரு தொடக்கம் அவனுடைய உடலமைப்பில், அவனுடைய மன அமைப்பு அதாவது ஆவி ஆத்துமா சரீரம் ஆகியவைகளில், அவை அமைப்பு ரீதியாக ஆண்டவராகிய கர்த்தர் பேசும்போது ஆதாம் கேட்டு இருக்கிறார், அதனால் அவர் பேசுவதைக் கேட்டு கேட்டு பழகி அதற்கு ஏற்றாற்போல ஆண்டவரே பேசும் திறனை கொடுத்ததை இவர் பெற்றுக்கொண்டு, திருப்பி பதில் அளித்திருக்க வேண்டும். இப்படி பல நாட்கள் அல்லது பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் அல்லது பல வருடங்கள், யாருக்கும் இதனுடைய கால அளவு சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இருவருடைய உறவு இப்படி ஒரு மொழியின் உறவாகதான் தொடங்கியது.


இது எப்படி ? எந்த மொழியைச் சார்ந்து வந்தது? என்ற கேள்விகள் வரும். இந்த முதல் மனிதனுக்கு பரிசுத்த வேதம் அதாவது கர்த்தர் சூட்டிய பெயர் ஆதாம். ஆதாம் என்ற வார்த்தை இந்த உலகத்தில் இருக்கிற எந்த மொழிக்கான ஒரு சொல்? ஒரு வார்த்தையை கேற்கும்போது (அ) பார்க்கும்போது, இது எந்த மொழிக்கான வார்த்தை? இதனுடைய சொல் எந்த மொழியிலிருந்து வந்தது? எபிரேய மொழியி எதிலிருந்து வந்தது?என வினா எழுப்பி ஆராய்தல் அவசியம்.
ஆகையால் என்னை பொறுத்த வரைக்கும் ஆதாம் தேவனோடு பேசியது எபிரேய மொழி. தேவன் ஆதாமோடு பேசியதும் எபிரேய மொழி. எப்படியெனில் முன்பு கூறியது போல ஆதாம் என்பது எபிரேய மொழி , ஆதாமிலிருந்து ஏவாளை உருவாக்கினார் அதாவது பெண்ணை உருவாக்கி, அந்தப் பெண்ணுக்கும் ஏவாள் என்பது அல்லது பெண் என்ற வார்த்தைக்கு ஈஷ் என்பது எபிரேய வார்த்தையாகும். எபிரேய மொழியானது வேரொருமொழியிலிருந்து வந்ததாக எண்ணிவிட முடியாது. கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்! என்று சொல்லப்பட்டாலும், ஏதேனில் ஆண்டவரால் படைக்கப்பட்ட ஆதாமோடு தேவன் பேசியது தமிழ் என்பதற்கு என்னிடத்தில் கடுகளவும் ஆதாரம் இல்லை. ஆகையால், பரிசுத்த வேதம் சொல்லுகிறதை இன்று நான் உங்களுக்கு எடுத்துரைக்க விழைகின்றேன். இந்த நிலையிலேயே நாம் சத்திய வேதத்தின் ஆதாரத்தை அள்ளிக் கொள்வதா? இல்லையென்றால் எங்கோ சொல்லப்பட்ட ஒன்றை கிள்ளி எடுத்து பேசப்போகிறோமா? இதனை நாம் சிந்திக்க வேண்டும்! ஆகையால்தான் உலகத்தில் வேறு எந்த ஒரு அரைகுறை ஆய்வுகளையும் நம்பாமல், சத்திய வேதம் என்ற அந்த ஆய்வினை மட்டுமே நான் நம்பத் தகுந்ததாக இருக்கின்றது.


ஆகையால் ஆதமுடைய விஷயம் மட்டுமல்ல ஆதமுடைய முழு சந்ததியையும், ஏன்? வேதாகமத்தின்படி முதல் மனித வரலாற்றை, அவன் சந்ததியை, இவ்விடத்து நாம் கண்டு கொள்ள வேண்டிய உண்மை அல்லது அற்புத வெளிப்பாடு என்னவெனில், தேவன் முதல் மனிதனோடு உறவுகொள்ள பயன்படுத்திய மொழி எபிரேய மொழி என்பது. இப்படி, நான் எழுதுவதால், மொழி வெறி கொண்டு அல்லது மொழி பற்று உடையோர் என்னுடன் பணி போர் நடத்த வேண்டிய அவசியமில்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது பரிசுத்தவேதாகமம் அதன் ஆதாரத்தோடு பேசுகிறேன். முதல் மனிதர் பேசிய மொழி வேறு ஒன்று என்று யாரேனும் எனது கட்டுரைக்கு பின்பு எனக்கு ஆதாரத்தோடு தெரிவிப்பீர்களானால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அந்த ஆதாரத்தையே எனது கட்டுரையின் திருத்தமாக கொண்டுவந்து நான் அதனை பதிவிட தயாராக இருக்கின்றேன்.


ஆகையால் தொல்பொருள் ஆராய்ச்சி இருக்கின்றது, அகழ்வாராட்சி இருக்கின்றது, அறிவியல் ஆராய்ச்சி இருக்கின்றது, ஆகையால் அந்த ஆண்டுகள் கணக்கெல்லாம் இப்படி இருக்கிறது என்றுஆதாரத்தோடு தெரிவியுங்கள், மூத்த மொழி என்று சொல்லி இந்த உலகத்திலே பல, மொழி சண்டைகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் முதல் மொழி என்று சொல்வோரும், இல்லை இல்லைசமஸ்கிருதம் அதுதான் முதல்மொழி என்று சொல்வோரும், இல்லை சீனா என்ற சைனா சீன மொழி முதல் மொழி என்று சொல்வோரும் உண்டு.


இந்நிலையில் நான் இந்த போருக்குள் இந்த சண்டைக்கு உள்ளே வராமல், வேத ஆதாரத்தோடு சத்தியவேதம் எனக்குத் தந்த வசன ஆதாரங்களை வைத்து என்னுடைய ஆண்டவர்,அல்லது இந்த பிரபஞ்சத்தின் ஆண்டவர் பிதாவாகிய தேவன், அவருடைய சிருஷ்டிப்பு அவர் தன் சாயலில் படைத்த ஆதாம், அவனோடு அவர் கொண்ட உறவுக்கு பயன்படுத்திய மொழி எபிரேய மொழி. அதனுடைய மூலம் எங்கிருந்து வந்தது? வேறு எந்த மொழியுடனும் தொடர்பு இருக்கிறதா என்றால்? இல்லை என்பது எனக்குத் தெளிவாக தெரியும். இங்கே இன்னொரு விஷயத்தை நான் எழுத ஆசைப்படுகிறேன், என்னவென்றால்: எபிரேய மொழி இன்றைக்கு பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது அது எழுத்து வழக்கில் அல்லது ஏட்டளவில் வருவதற்கு கண்டிப்பாக பல ஆண்டுகள் எடுத்தது. இன்னும் சொல்லப்போனால், ஆதாம் வாழ்ந்த அந்த 930 வருஷம் என்று எழுதப்பட்டிருக்கும், ஏறக்குறைய 10 நூற்றாண்டுகள் ஆதாமின் ஏழு தலைமுறைகள் எபிரேய மொழியையே பேச்சுவழக்கிலே வைத்திருந்தார்கள் என்பது என்னுடைய புரிதல், அல்லது என்னுடைய ஆய்வு.
நீங்கள்: ஆதியாகமம் பதினோராம் அதிகாரத்தை கவனித்தீர்களானால்,அங்கே பாபேல் என்னும் ஒரு கோட்டை கட்டப்படுகிறது, அப்பொழுது எழுதப்படுகிற வார்த்தை என்ன? ஏழாவது வசனத்தை கவனித்தால் பூமி முழுவதும் ஒரே பாஷை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் என்ன சொல்கிறேன்: அந்த ஒரே பஷை (மொழி ) எபிரேயம் என்கிறேன், ஒரே பஷை என்று வேறு ஏதேனும் பஷை இருந்திருந்தால் நீங்கள் எனக்கு ஆதாரத்தோடு, தயவுசெய்து அன்பாக கேட்கின்றேன் எனக்கு நீங்கள் எழுதிய அறிவிக்கலாம், அந்த ஒரே பஷையாகிய எபிரேய பாஷை யிலிருந்து தான் உலகம் முழுவதும் மொழிகள் பிறக்க வேண்டுமென்று மொழிகள் பிரிந்து, மக்கள் மொழி வாரியாக மாநிலங்கள் நாடுகள் பிரிக்கப்பட வேண்டும் என்று ஆண்டவர் விரும்பி, அங்கே சேம் காம் யாப்பேத் என்பவர்களுடைய சந்ததிகளை கர்த்தர் பாஷைகளை மொழிகளை பிரித்து, அவர்களையும் பிரித்து உலகம் முழுவதற்கும் பரவச்செய்தார்.


இவையெல்லாம் மிக அழகாக பரிசுத்த வேதத்தில் ஆதாரங்களாக இருந்தும்கூட அநேகர் இவற்றை ஏற்பதில்லை.’கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அழையும் கூட்டத்தை என்னச்சொல்லுவது” இதனை வீடியோவில் மிக அழகாக யூடியூபில் பேசி இருக்கின்றேன்,நீங்கள் விரும்பினால் அழகாய் கற்றுக்கொள்ளலாம். ஏராளமான வேத ஆதாரங்களை அங்கே அறிவுறுத்தியுள்ளேன், அதற்கு தகுந்த ஆதாரங்கள் மிக அற்புதமானது. மனித கதைகளோடு அல்லது மனிதன் இட்டுகட்டும் விஷயங்களோடு எனக்கு உடன்பாடு கிடையாது. நான் முழுக்க முழுக்க சத்திய வேதத்தை என் வசமாய் ஆதாரமாய் வைத்து,நான் எழுதுவதும் பேசுவதும் வேதத்தை சார்ந்துமட்டுமே! வேறு யாருடைய கருத்துக்கும் வேறு ஒருவருடைய ஆய்வுக்கும் உட்படாமல், வேதம் என்னிடம் இருக்கின்ற மிகப் பெரிய ஆதாரம் என்பதை அறிந்து, இவற்றை நான் எழுதுகிறேன் அறிவிக்கின்றேன். என்னை பொறுத்த வரைக்கும் எபிரேய மொழி என்பது ஆதிமொழி, நான் எந்த யூதர்களுக்கும் அவர்கள் சார்ந்த மொழிக்கும் வக்காலத்து வாங்குவதாக எண்ணிவிடக்கூடாது. அல்லது நான் ஏதோ ஒரு பரிந்துரை செய்கிறேன் என்று எண்ணிவிடக்கூடாது, நான் அந்த மொழியை போற்றுவதற்கு ஒரே காரணம் என் ஆண்டவர் பேசிய, என் ஆண்டவர் மனிதனோடு உறவுகொள்ள, என் ஆண்டவர் தனது மனதின் எண்ணங்களை திரையிட்டு, அதனை பதிவு செய்ய பயன்படுத்திய மொழி எபிரேய மொழி என்ற ஆணித்தரமான 100 சதவீத ஆதாரம் வேதத்தின் அடிப்படையில் இருப்பதாலேயே, நான் இவ்விதமாய் எழுதுகிறேன்.


ஆகையால் புரிந்துகொள்ளுங்கள்! சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்! வசனங்களை குழப்பிக்கொள்ளாதீர்கள்! வேதம் சொல்லுகின்ற விளக்கங்களை விளங்கிக்கொள்ளுங்கள். ஏழு தலைமுறைக்கும் கொடுக்கப்பட்ட பெயர்கள் யாவும் எபிரெயம். ஆண்டவர் படைத்த சிருஷ்டிப்புகள் அனைத்தும் எபிரேய பெயர்கள், இதை மறுக்க இயலாது ஒருவேளை தர்க்கரீதியாக சிலர் இப்படி கேட்கலாம்! என்னவென்று? அந்த காலத்திலே மோசே எழுதும் பொழுது அவருக்கு புழக்கத்திலிருந்த மொழியானது எபிரேய மொழி , அவருடைய தாய் மொழியும் எபிரேய மொழி, அதனால் வேதத்தை அவரே அவருடைய தாய் மொழியில் எழுதியிருக்கிறார். இப்படி எழுதின காரணத்தினாலேயே நீங்கள் எபிரேய மொழி தான் முதன் மொழி என்று பேசுவது எப்படி சரி என்று கேட்கலாம்! உண்மையாகவே ஆதியிலே ஆண்டவர் என்ன மொழியைப் பேசினாரோ, அந்த மொழியிலேயே மனிதர்களோடு பேசினார். அந்த மனிதர்கள் அதை புரிந்து கொண்டு அவருடன் அல்லது ஒருவருக்கொருவர் பேசி இருக்கவேண்டும்,ஒருவேளை அவர்கள் தமிழில் பேசியிருந்தால் அல்லது வேறு ஒரு மொழியில் பேசியிருந்தால் அந்த ஆதி மொழி மோசேயின் காலம் வரும்போது அழிந்து விட்டதா ? இதற்கு ஆதாரம் உண்டா?


முதல் மனிதர் ஆதாம் பேசிய மொழி அந்த மொழியானது எவ்வளவு காலம் நீடித்திருந்தது அந்த மொழி இருந்ததா இல்லை மோசே காலம் வருவதற்கு முன் அழிந்து விட்டதா அப்படியானால் மோசே பேசின எபிரேய மொழி இதன் தொடர்ச்சியாக வந்தது அப்படி தொடர்ச்சியாக வந்து இருந்தால் அந்த மொழி தொடர காரணமாயிருந்த மொழியானது இதனுடன் உச்சரிப்பு முறையிலோ அல்லது எழுத்து முறையிலோ அல்லது பேச்சு முறையிலோ எப்படி மாறுபட்டது என்று யாரேனும் எனக்கு ஆதார பூர்வமாய் விளக்கிவிட முடியுமா இதை நான் சவாலாகவே வைக்கிறேன். ஆகையால் என்னால் சொல்லமுடியும் முதல் மொழி எபிரேயம் என்று ஏனென்றால், எபிரேய மொழியில் இருந்து எப்படி எல்லாம் உலகத்தின் பிற மொழிகள் பிரிந்து சென்றது முதல் மனிதனுடைய சந்ததி , இனம், தலைமுறையைக்கொண்டு, எப்படி மூன்று பெரும் பிரிவுகளாக நோவாவுடைய பிள்ளைகள் மூலமாக சந்ததி பிரிந்தது? அந்த சந்ததியிலிருந்து மொழிகள் பிரிந்து, உலகம் முழுவதற்கும் 3 பகுதிக்கு மக்கள் கூட்டம் பெருகி ,அந்த மொழிகள் அவர்கள் பிராந்திய ரீதியாக பாபேலில் குழப்பமடைந்த அந்த மொழிகள் ,உலகம் முழுவதுக்கும் பிரிந்து சென்று வெவ்வேறு மொழிகளாக அடைந்ததும், அந்த வெவ்வேறு மொழிகளில் சாரல் அல்லது சாயல் எபிரேய மொழியையே தழுவி இருக்கிறது. அது மிகத் தெளிவாய் மொழியியல் அறிஞர்கள் தெளிவுர எழுதியிருக்கிறார்கள் இதற்கு முன்பு இவர்கள் இவ்விதமான ஆதாரங்களை எழுதியது உண்டா? சொன்னதுண்டா ? என்பதெல்லாம் பல கேள்விகள் இருக்கின்றன, என்னை பொறுத்த வரைக்கும் மொழியியல் ஆய்வுக்குழுவினர் முதல் மானுடவியல் ஆய்வுகளை நடத்தட்டும், ஏனென்றால் ஒரு மானுடவியல் தொடக்கத்தை நாம் சரியாய் ஆராயாத வரைக்கும் மொழியியல் தொடக்கம் அல்லது மொழிகளின் வழிவந்த தொடக்கத்தினை நாம் அறிந்துகொள்வது கடினம். நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால்! மானுடவியல் தொடக்கத்தை புறந்தள்ளிவிட்டு அல்லது ஆதார பூர்வமாய் பரிசுத்த வேதம் சொல்லுகின்ற மானுடவியல் தொடக்கத்தை நாம் புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு, மத சாயம் பூசி அல்லது அதற்கு வேறு காரணம் காட்டி ஒதுக்கி விட்டு, வெறும் மொழியை மட்டுமே ஆராய முனைந்தால், அந்த மொழிக்கான மனிதர்கள் யார்? அந்த மொழி கலாச்சாரம் எது ? அந்த மொழியையுடைய மனித வரலாறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்று நான் ஆராய்ச்சியாளர்களை கேட்கின்றேன்.


மேற்சொன்ன காரியங்களில் எனக்கு அவர்கள் விடை அளிக்க முடியுமா? விளக்கம் தர முடியுமா? இங்கே எந்த மொழி முதல் மொழி என்ற போட்டிகள் ஆயிரம் இருந்தாலும், எனக்கு என் தெய்வம் தந்த பரிசுத்த வேதாகமத்தில் மிக அழகான ஆதாரங்கள் எபிரேய மொழி சார்நது இருக்கிறது. அந்த மொழியில் அற்புத விளக்கங்கள் பிற்காலத்திலே எபிரேய மொழியின் எழுத்துக்கள் தான் உலகத்தில் மிக பழைமையான மற்றும் மனித வரலாற்றின் முதல் மனிதன் பேசிய மொழி மனித வரலாற்றில் சிருஷ்டிப்பின் மறைக்கப்பட்ட அல்லது சூட்டப்பட்ட அற்புதமான மொழி.
ஆகையால் எபிரேய மொழியில் அடிப்படை ஆழங்களை, இந்த மொழியின் தொடக்க வரலாற்றை நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள எனது வீடியோக்களை பார்க்கலாம்.


முடிவாக ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டு முடிக்கின்றேன். பரிசுத்த வேதாகமத்தில் வானம் , வானங்கள் என்பது சமாயீம் என்றும் இதற்கு அற்புத விளக்கங்கள் பொருள் விளக்கங்கள் இருக்கின்றன. எபிரேய மொழி ஆச்சரியம் அதிசயம் ஆழங்கள் நிறைந்த என்னுடைய வீடியோக்களை பார்த்து இருக்கலாம், ஆனால் அந்த மகத்துவத்தை அறிந்து தெரிந்து கர்த்தரை மகிமைப்படுத்த நீங்கள் எந்தளவு கற்றுக் கொள்ள உங்களுக்கு ஆர்வம் உண்டோ அந்த அளவுக்கு வீடியோக்களில் இருந்து பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். சத்திய வேதத்தின் ஆதாரங்களை இறுக்க பிடித்துக்கொள்ளுங்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும். கர்த்தருடைய வார்த்தை சகல பிரஸ்தாபத்தை காட்டிலும் அவர் தமது வார்த்தையை பயன்படுத்தி யுள்ளார். சங்கீதத்தில் ஆண்டவர் மிக அற்புதமாக எழுதியுள்ளார், அதன்படி சகல கனமும் மகிமையும் வார்த்தைக்கு உண்டாகட்டும். உங்களுடைய கேள்விகள் அல்லது மேலும் விளக்கங்கள் இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து நீங்கள் படித்து கற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய நாமம் மகிமைப்படட்டும் கர்த்தருடைய வார்த்தைக்கு சதா கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்! நன்றி.

2 Comments

  1. Jayasunder J October 22, 2021

    அருமையான விளக்கம் சார்… இந்த மாதிரி நிறைய பதிவுகள் எழுதுங்கள்.. நாங்கள் பயன் அடைவோம்… நிறைய விஷயங்கள் உங்கள் பதிவுகள் மூலம் கற்றுக்கொள்ளுவோம்

  2. Lydia subendran March 12, 2022

    அருமையான விளக்கம் பாஸ்டர் இந்த மாதிரி நிறைய பதிவுகள் எழுதுங்கள்.. நாங்கள் பயன் அடைவோம்… நிறைய விஷயங்கள் உங்கள் பதிவுகள் மூலம் கற்றுக்கொள்ளுவோம்
    மிகவும் நன்றி

Leave a Comment

Your email address will not be published.